செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 28 மே 2022 (23:25 IST)

இந்திய அளவில் முதலிடம் பிடித்த நடிகர் விஜய்! ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் முன்னணி   நடிகர் விஜய் இந்திய அளவில் டாப் 10 நடிகர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததுள்ளார்.

தென்னிந்திய சினிமா படங்கள் இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவில் வசூலைக் குவிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பாலிவுட்  பிரபலங்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்திய அளவில் தென்னிந்திய நடிகர்கள் புகழ்பெற்று, மக்களிடம் பிரபலமாகியுள்ளனர்.

இந்த நிலையில், ஆர்மக்ஸ் மீடியா  நிறுவனம் இதுகுறித்து ஒரு ஆய்வுசெய்து ஒரு டாப் 10  பட்டியல் வெளியிட்டுள்ளது.

அதில், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி, பஞ்சாலி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் உள்ள நடிகர்கள் இதற்காக கணக்கில் எடுத்துக் கொள்ளபப்ட்டனர்.

அதன் அடிப்படையில், 1.விஜய், 2.ஜூனியர் என்.டி.ஆர்,3.பிரபாஸ், 4. அல்லு அர்ஜூன், 5. அக்ஷய்குமார், 7. யஷ்,8. ராம்சரண், 9.சூர்யா, 10, மகேஷ் பாபு இடம்பெற்றுள்ளனர்.

இப்பட்டியலில் விஜய், சூர்யா உள்ளிட்ட  தென்னிந்திய நடிகர்கள் இந்திய அளவில் டாப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.