வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 28 மே 2022 (17:24 IST)

எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்ய  உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

வருமான வரி தொடர்பாக  தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி  இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம்,  பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் எஸ்.ஜே.சூர்யா வருமான வரி கணக்கை செய்யாததால் வழக்குகளை அவர் எதிர்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.