சனி, 21 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 14 மே 2022 (23:24 IST)

பிரபாஸுக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை

பிரபாஸ்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த ஆண்டு அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

இதையடுத்து, நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கும் விஜய்66 படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அதேவேளை, இந்தியில் மிஷன் மஜ்னு, குட்பை, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்,  பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும்  புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இப்படத்தை அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ஸ்பிரிட் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது,ஆதிபுரூஸ்ஃஸ், சலார், பிராஜெக்ட் கே உள்ளிட்ட படங்களில்  நடித்து வரும் பிரபாஸ் இப்படத்தை  முடித்த பின், ஸ்பிரிட் படத்தில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது.