திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (18:13 IST)

கே.ஜி.எப்-2 படத்திற்கு போட்டியாக அல்லு அர்ஜூன் படம் !

தெலுங்கு சினிமா படங்கள் இந்திய அளவில் பிரமாண்டமான வெளியாகி உலக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இப்படங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு அல்லு அர்ஜூன் – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் புஷ்பா. இப்படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி சுமார் ரூ.350 கோடிக்கு மேல் வசூலீட்டியது.  இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றன.
pushpa pushpa

இந்த நிலையில், புஷ்பா -2 படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகும்  நிலையில், கே.ஜி.எப்-2 படத்திற்கு இணையான பிரமாண்டத்துடன் புஷ்பா-2 பட தயாரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.
இதனால்  ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.