திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 2 ஏப்ரல் 2022 (20:31 IST)

சூப்பர் ஸ்டார் -கீர்த்தி சுரேஷ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் 'சர்க்காரு வாரு பாட்டா ' படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குநர் பரசுராம் இயக்கத்தில், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சர்காரு வாரு பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படத்தில் மகேஷ்பாபு, கீர்த்திசுரேஷுடன் பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளனர்.இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இன்று யுகாதி தினத்தை முன்னிட்டு சர்காரு பாட்டா படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், வரும் மே மாதம் மகேஷ்பாபுவின்  'சர்க்காரு வாரு பாட்டா ' படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  இப்படத்தில் இடம்பெற்ற காலாவதி என்றா பாடல் சமீபத்தில் #100MillionforKalaavathi  100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளதற்கு  -இசையமைப்பாளர் தமன் தனது டுவிட்டர் பக்கத்தில்  சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுடன் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.