திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 20 மே 2020 (18:41 IST)

மாஸ்டர்’ படத்தால் கோடிக்கணக்கில் நஷ்டம்: தளபதி விஜய் செய்த உதவி

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
 
இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வந்த போதிலும் தீபாவளிக்கே இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு மேல் இருப்பதால் அதுவரை இந்த படத்தின் முதலீட்டிற்கான வட்டி கட்டும் சூழ்நிலை எழுந்துள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தின் உலகளாவிய ரிலீஸ் உரிமையை பெற்ற லலித்குமார் என்பவர் தற்போது பண நெருக்கடியால் கஷ்டப்படுவதாக தெரிகிறது. ’மாஸ்டர்’ படத்தை வாங்கிய பணத்திற்கான வட்டியை அவர் தற்போதும் கட்டிக் கொண்டு இருப்பதாகவும் இதனால் அவருக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் என்று கூறப்படுகிறது
 
இது குறித்து தகவல் அறிந்த தளபதி விஜய் லலித்தை அழைத்து அவருக்கு நம்பிக்கை கொடுத்ததாகவும், அதோடு  அவருடைய பேனரில் ஒரு படம் நடித்து கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது. விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் நிலையில் அதற்கு அடுத்த படத்தை லலித்குமார் தயாரிப்பார் என்று கூறப்படுகிறது.