புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 மே 2020 (07:42 IST)

சன் டிவியில் ஒளிபரப்பான நம்ம வீட்டுப்பிள்ளை – பாண்டிராஜுக்கு விஜய் படத்தை இயக்க் வாய்ப்பு கிடைக்குமா?

சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலையில் இயக்குனர் பாண்டிராஜை இயக்குனர் ரத்னகுமார் பாராட்டித் தள்ளியுள்ளார்.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்த நம்ம வீட்டுப்பிள்ளை திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கினார். தொடர் தோல்விகளாகக் கொடுத்து வந்த சிவகார்த்திகேயனுக்கு அந்த படம் மீண்டும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில் இந்த படம் கடந்த வாரம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.

இதனைத் தொடர்ந்து படக்குழுவினருக்கு அனைவரும் பாராட்டுகளைத் தெரிவித்த நிலையில் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னக்குமார் இயக்குனர் பாண்டிராஜைக் குறிப்பிட்டு ‘#NammaVeettuPillai சிறப்பான தரமான குடும்ப திரைப்படம் @pandiraj_dir தளபதி  @actorvijay அண்ணா வச்சு ஒரு கிராமத்து குடும்ப படம் waiting’ எனக் கூறியுள்ளார்.

ரத்னகுமார் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் கதை உருவாக்கத்தில் பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விஜய் 65 படத்தை இயக்கும் இயக்குனர் பட்டியலில் பாண்டிராஜ் பெயரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.