திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 மே 2020 (16:15 IST)

தேவர் மகன் 2 தான் தலைவன் இருக்கின்றானா? விஜய் சேதுபதியோடு மோதும் கமலின் அரசியல்!

கமல் அடுத்ததாக நடிக்க இருக்கும் தலைவன் இருக்கிறான் திரைப்படம் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லப்படுகிறது.

தலைவன் இருக்கின்றான் திரைப்படம்தான் கமல் கடைசியாக நடிக்கும் படம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கடந்த 2008 ஆம் ஆண்டே இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. அப்போது அதற்கான சூழ்நிலைகள் அமையாததால் படம் ஆரம்பிக்கப்படாமலேயே கைவிடப்பட்டது. அதன் பின் கடந்த ஆண்டு திடீரென மீண்டும் அந்த படத்தை ஆரம்பிக்கப் போவதாக கமல் அறிவித்தார். இதற்காக ரஹ்மானை சந்தித்து அந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்து பாடல்கள் மெட்டமைக்கும் பணி முடிந்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்படுகிறது. தேவர் மகனில் கமல், ரேவதி மற்றும் வடிவேலு ஆகியோர் தாங்கள் நடித்த அதே கதாபாத்திரத்தில் நடிக்க, நாசரின் மகனாக வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறாராம். இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் கொரோனா ஊரடங்கு விளக்கப்பட்டதும் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு துவங்கும் என சொல்லப்படுகிறது.