திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (18:50 IST)

’கோட்’ டிரைலர் ரிலீஸ் தேதி.. அர்ச்சனா கல்பாத்தி அறிவிப்பு..!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள கோட் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைதளத்தில் சற்று முன் வெளியிட்டுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
 
விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் சற்று முன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைதளத்தில் ’கோட்’ படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நாளை வெளிவரும் டிரைலர் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.
 
Edited by Siva