திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (15:14 IST)

விஜய் பட தயாரிப்பாளரின் அடுத்தடுத்த தோல்விப் படம்!

.

தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜுவின் திரைப்படங்கள் சமீப காலமாக தோல்வி அடைந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்  தில் ராஜு. இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களை வைத்து பல படங்கள் தயாரித்து, அவற்றை சூப்பர் ஹிட் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில்,  சமீபத்தில் தில் ராஜு பாலிவுட் சினிமாவுக்குச் சென்றார்.ஷாகித் கபூர்  நடிப்பில், தில் ராஜு தயாரித்த ஜெர்சி படம் தோல்வி அடைந்தது.

அதேபோல் ராஜ்குமார் ராவ் நடிப்பில் வெளியான படமும் ஓரளவு வசூலை மட்டுமே ஈட்டியது. இதனால், தில் ராஜு அதிர்ச்சி அடைந்துள்ளார். தற்போது ஒரே நேரத்தில் விஜய்61 வது படமான வாரிசு மற்றும் ராம்சரணின் 15 வது படமான ஆர்.சி15 ஆகிய படங்களை பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறார். இவை வெற்றியடைய வேண்டும் என எதிர்பார்த்துள்ளார்.