1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2022 (15:45 IST)

ஜிப்ரான் இசையில் கணமான வரிகளில் டாணாகாரன் ”துடித்தெழு தோழா” லிரிக்கல் வீடியோ!

டாணாகாரன் படத்தின் துடித்தெழு தோழா படத்தின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி சில மாதங்கள் ஆகிறது என்பதும் இந்த படத்தின் டீஸர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் ‘டாணாக்காரன்’  திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படம் ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாக உள்ளது. காவலர் பயிற்சிப் பள்ளியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். ஜெய் பீம் பட புகழ் நடிகர் தமிழ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலரை சில தினங்களுக்கு முன்னர் நடிகர் கார்த்தி டிவிட்டரில் வெளியிட்டார். மிரட்டலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த டிரைலர் இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் இப்போது படத்தில் இடம்பெற்றுள்ள துடித்தெழு தோழா என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.