கமலின் ’விக்ரம்’ படத்தின் கேரள உரிமையைக் கைப்பற்றிய விஜய் பட தயாரிப்பாளர்!
கமல்ஹாசன் நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடித்து ரிலீஸ் ஆக உள்ள திரைப்படமாக விக்ரம் உருவாகி வருகிறது.
கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கமல், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய மூவரின் கதாபாத்திரங்களைப் பற்றிய அறிமுகமாக ஒரு புதிய வீடியோவை இணையத்தில் வெளியிட, அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையடுத்து படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இப்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் டிரைலர் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப்புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் கேன்ஸ் திரைப்பட விழாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்துக்கு உருவாகியுள்ள எதிர்பார்ப்புக் காரணமாக மற்ற மொழிகளிலும் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளது ராஜ்கமல் பிலிம்ஸ். இந்நிலையில் படத்தின் கேரள விநியோக உரிமையை விஜய்யின் புலி படத் தயாரிப்பாளர் சிபு தமீம்ஸ் அதிக தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் மலையாள நடிகரான பஹத் பாசிலும் இருப்பதால் கேரளாவில் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.