வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 29 டிசம்பர் 2020 (10:56 IST)

இதுதான் கடைசி… நடையக் கட்டலாம் என இருந்தேன் – தங்கம் பட நடிகர் நெகிழ்ச்சி!

நடிகர் காளிதாஸ் ஜெயராம் தங்கம் படத்தில் தான் நடித்த கதாபாத்திரத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் சினிமாவை விட்டே விலகலாம் என இருந்ததாக கூறியுள்ளார்.

சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிப் நல்ல விமர்சனத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் படம் ஆந்தாலஜி வகைப் படமான பாவக்கதைகள். இவற்றை வெற்றிமாறன், கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் இயக்கி வருகின்றனர். இதில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான தங்கம் திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மூன்றாம் பாலினத்தவராக நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அவர் தயங்கினாராம். ஆனால் அதன் பின்னர் நடிக்க ஒத்துக்கொண்ட அவர் இந்த கதாபாத்திரத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் சினிமாவை விட்டே விலகலாம் என முடிவு செய்திருந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாகவே அந்த கதாபாத்திரத்தை மக்கள் ஏற்று ரசித்தனர்.