விஜய் பட நடிகருக்கு வாள் சண்டையின்போது படுகாயம்...
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஒரு ஷூட்டிங்கில் வாள் சண்டையின்போது படுகாயமடைந்துள்ளார்.
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் சஞ்சய் தத். இவர், பாலிவுட் சினிமாவில் 80, 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஆவார்.
தற்போது, முன்னணி நடிகர்களின் படங்களில் சிறப்பு வேடங்கள், குணச்சித்திர வேடங்கள் மற்றும் வில்லனாகவும் நடித்து வருகிறார்.
கேஜிஎப் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்டியிருந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில், நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்குப் பிறந்தநாள் பரிசாக லியோ படத்தில் அவர் சம்பத்தப்பட்ட கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறினர் லியோ படக்குழுவினர். இந்த வீடியோ ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் அந்தோனிதாஸ் என்ற கேரக்டரில் சஞ்சத் தத் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ராம் பொத்தானி கதாநாயகனாக நடிக்கும் 'டபுள் இஸ்மார்ட்' படத்தில் தற்போது நடித்து வரும் சஞ்சய் சத்திற்கு இப்படத்தின் வாள் சண்டைக் காட்சியின்போது தலையில் அடிபட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலையில் 2 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.