1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2023 (07:59 IST)

ரஜினி லோகேஷ் படத்தில் வில்லனாக நடிக்க இப்போதே துண்டு போட்ட பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் நான்கே படங்களில் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றி பெற்று வரும் நிலையில் முன்னணி நடிகர்கள் அவர் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளனர்.

தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வரும் லோகேஷ், அடுத்து ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த படத்தில் தான் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என பிரபல நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் லோகேஷிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே விஜய் சேதுபதி லோகேஷ் இயக்கத்தில் மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படங்களிலும், ரஜினிகாந்துடன் பேட்ட திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.