புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 17 ஜனவரி 2020 (12:40 IST)

அன்று எம்ஜிஆர், இன்று விஜய் – ரசிகர்களின் புது ட்ரெண்டிங்!

எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் எம்ஜிஆரையும், விஜய்யையும் ஒப்புமைப்படுத்தி ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

தமிழக முன்னாள் முதல்வரும், பழம்பெரும் நடிகருமான எம்.ஜி.ராமசந்திரனின் 103வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. எம்ஜிஆரின் ஆளும் கட்சியான அதிமுகவினர் இன்று அவரது சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வர போவதாக அரசல் புரசலாக பேசி வரும் நிலையில் விஜய் படங்களிலும் எம்ஜிஆர் ரெஃபரென்ஸ் அதிகமாக தென்படுகிறது. சமீபத்தில் வெளியான மெர்சல், பிகில் போன்ற படங்களில் எம்ஜிஆர் குறித்த வசனங்கள், பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது விஜய் ரசிகர்கள் எம்ஜிஆர் பிறந்த நாளில் “அன்று எம்ஜிஆர் இன்று விஜய்” என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் ட்ரென் செய்து வருகின்றனர்.

அதில் எம்ஜிஆர் மக்களுக்கு கை காட்டுவது, குழந்தைகளுக்கு சத்துணவு ஊட்டுவது போன்ற புகைப்படங்களுக்கு நிகராக விஜய்யும் அதே செயல்களை செய்துள்ள புகைப்படங்களை பதிவிட்டு ஒப்பிட்டுள்ளனர். தற்போது இந்த ஹேஷ்டேக் வேகமாக ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில் அதிமுகவினர் சிலர் விஜய் ரசிகர்களின் இந்த ட்வீட்டுக்கு எதிர்ப்புகளையும் பதிவிட்டு வருகின்றனர்.