1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 17 ஜனவரி 2020 (08:04 IST)

அட்டகாசமாக வெளியான அரவிந்தசாமியின் எம்ஜிஆர் கெட்டப்:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்று கூறப்படும் ’தலைவி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார்
 
இந்த நிலையில் இந்த படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடிகர் அரவிந்த்சாமி நடித்து வருகிறார் என்பதும் அவருடைய கேரக்டர் இந்த படத்தில் முக்கியத்துவம் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரவிந்த்சாமி நடித்த எம்ஜிஆர் கேரக்டர் குறித்த பர்ஸ்ட் லுக் வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர் 
 
அதன்படியே சற்று முன்னர் எம்ஜிஆர் கேரக்டர் குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. அச்சு அசல் எம்ஜிஆர் போலவே இருப்பதால் எம்ஜிஆரையே மீண்டும் உயிரோடு பார்த்தது போல அவரது தொண்டர்களும் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது