1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (17:52 IST)

''பீஸ்ட்'' பட திருவிழாவுக்கு தயாரான விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13 ஆம் தேதி உலகம் முழவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் பீஸ்ட் படத் தயாரிப்பு நிறுவனமான  சன் பிக்சர்ஸ் செய்து வருகிறது.

இந்நிலையில், ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தை  ஒரு திருவிழாபோல் வரவேற்க விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.  இப்போது முதல் பீஸ்ட் படத்திற்காக கட் அவுட்கள், தோரணங்கள், போன்றவறை அமைத்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளதாகவும், இப்படதின் சிறப்புக் காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிறது.

கோடை காலத்தில் பீஸ்ட் படம் வெளியாவது   விஜய்  ரசிகர்களுக்கு  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.