1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 16 டிசம்பர் 2022 (08:51 IST)

வாரிசு படத்தில் எஸ் ஜே சூர்யா வேடம் என்ன? – பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

எஸ் ஜே சூர்யா வாரிசு படத்தில் நடித்துள்ளதாக ஒரு தகவல் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி கவனம் ஈர்த்தது.

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற தீ என்ற பாடல் சிம்பு குரலில் சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸானது. இந்த பாடலில் பாடியது மட்டும் இல்லாமல் சிம்பு நடித்தும் இருந்தார்.

இந்த படத்தில் ஏகப்பட்ட தமிழ் மற்றும் தெலுங்கு மொழி நடிகர்கள் நடித்து வரும் நிலையில் எஸ் ஜே சூர்யாவும் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதைப்பற்றி படக்குழு எதையும் அறிவிக்காமல் ரகசியமாக காத்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது வாரிசு படத்தில் நடித்துள்ள கணேஷ் வெங்கட்ராம், இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா ஒரு சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே விஜய்யின் நண்பன் படத்திலும் எஸ் ஜே சூர்யா கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.