வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (23:32 IST)

துணிவு படத்தை விட வாரிசுக்கு அதிக தியேட்டர்கள்! எங்கு தெரியுமா?

varisu
தமிழ் சினிமாவில் இரு முன்னணி நடிகர்கள்   விஜய் மற்றும் அஜித்.. இவர்கள் இருவரின் படங்களும் ரிலீஸின் போது ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இந்த வருடத்தில் தொடங்கப்பட்ட இவர்கள் இருவரின் படங்களும்( வாரிசு, துணிவு) வரும் பொங்கல் பண்டிகையொட்டி வெளியாகவுள்ளது.

ஏற்கனவே ரெட் ஜெயிண்ட் கைப்பற்றியுள்ள அஜித்தின் துணிவு படத்திற்கு நிறைய தியேட்டர்கள் தமிழகத்தில் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று தன் ரசிகர்களை வரவழைத்து விஜய் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், கேரளாவில், விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால், அங்கு விஜய்யின் வாரிசு படத்திற்கு 450 தியேட்டர்களும், அஜித்தின் துணிவுக்கு 200 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டதாகவும், இதற்கு விஜய் ரசிகர்கள் அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Edited By Sinoj