திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 9 நவம்பர் 2018 (18:40 IST)

ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா காசி தியேட்டருக்கு வாங்கடா!...ஒரு விஜய் ரசிகரின் ஆவேச வீடியோ

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வெளியான தினத்தை திருவிழா போல் கொண்டாடிய அவரது ரசிகர்கள் விண்ணை முட்டும் அளவுக்கு கட் அவுட்டும்  கலர் கலராக பேனர்களை வைத்தும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி இரண்டே நாட்கள் தான் நீடித்தது.

'சர்கார்' படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி அதிமுகனர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது விஜய் ரசிகர்கள் ஆசை ஆசையாய் வைத்த பேனர்களை கிழித்தனர். இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் இரண்டு விஜய் ரசிகர்கள் ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளனர். அதில் 'நீங்க நல்லது பண்ணியிருந்தா நல்லதா படம் எடுத்திருப்பாங்க, நீங்க கெட்டது தாண்டா பண்ணியிருக்கிங்க. நாங்க இல்லாத நேரமா பார்த்து பேனரை கிழிச்சு போட்டிருக்கிங்க. நாளை அதே காசி தியேட்டர்ல மறுபடியும் பேனர் வைக்கிறேன். எவனாவது ஒரு அப்பனுக்கு பொறந்திருந்தா காசி தியேட்டர் கிட்ட வாங்கடா! அப்படி வந்தீங்கன்னா நாங்க பேச மாட்டோம், எங்க அருவா தான் பேசும்

நாங்க தளபதி ரசிகர்கள் ஒண்ணு சேர்ந்த ஒரு அதிமுககாரன் உயிரோட இருக்க மாட்டிங்க. உங்களை ஏதாவது செஞ்சிட்டா, தளபதிக்கு கெட்ட பெயர் வந்துரும்ன்னு அமைதியா இருக்கோம் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.