சர்காரில் டிவியை எரித்தால் திருப்தியா? நீதிபதி சாட்டையடி கேள்வி

Last Updated: வெள்ளி, 9 நவம்பர் 2018 (15:41 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாக்கப்பட்டு தீபாவளி அன்று வெளியான சர்கார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் அரசியலில் பல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
குறிப்பாக படத்தில் அதுமுகவை விமர்சித்து பல நேரடி வசனங்கள் இருப்பதாகவும், மக்களுக்கு வழங்கிய இலவசங்களை எரிப்பது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 
 
இந்நிலையில் சர்கார் படத்தில் இருந்து இந்த காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டது. மேலும், நேற்று, படத்தின் இயக்குனர் முருகதாஸ் வீட்டிறுகு முன்னர் போலீஸார் குவிந்ததால் அவர் கைது செய்யப்படவுள்ளார் என செய்திகள் பரவியது. 
இதனை தொடர்ந்து இன்று காலை முருகதாஸ் முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவடைந்து முருகதாஸை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 27 ஆம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
அதோடு வழக்கை விசாரித்த நிதிபதி இளந்திரையன், படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் அளித்த பின்னர் படத்தை எதிர்ப்பது ஏன்? பட காட்சியில் மிக்ஸி மற்றும் கிரைண்டரை எரித்ததுதான் பிரச்சனையா? டிவியும் சேர்த்து எரிக்கப்பட்டிருந்தால் திருப்தியா? படத்தை வெறும் படமாக மட்டும் பாருங்கள் என சாட்டையடி கேள்வியை கேட்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :