ஏன் எங்களுக்கு இந்த பப்ளிசிட்டி கொடுக்கவில்லை”- ‘தமிழ்ப்படம்’ இயக்குநரின் கிண்டல்

VM| Last Updated: வெள்ளி, 9 நவம்பர் 2018 (15:09 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீ‌பாவளியன்று திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

சர்கார் படத்தில் ஜெயலலிதா கொடுத்த இலவச பொருட்களை தூக்கி எறிவது, உள்பட சில காட்சிகள் அதிமுக அரசை விமர்சிப்பது போல் உள்ளதாக புகார் எழுந்தது.  இதைத்தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் திரையரங்குகளை முற்றுகையிட்டு, விஜய்யின் பேனர்களை கிழித்தனர். இதனால் பதற்றம் நிலவுகிறது. 
 
இந்நிலையில், ட்விட்டரில கருத்து பதிவிட்டுள்ள ‘தமிழ்ப்படம்’ இயக்குநர் அமுதன், “இதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். நாங்களும் எங்களால் முடிந்த அளவிற்கு சிறப்பானதை தரமுயன்றோம். ஆனால் எங்களுக்கு இப்படி ஒரு பப்ளிசிட்டியை தரவில்லை. எனவே இது முற்றிலும் ஒருதலை பட்சமான நடவடிக்கை” என கிண்டலாக கூறியுள்ளார். 
 
‘தமிழ்ப்படம்’ 2ஆம் பாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மெரினாவில் தர்மயுத்த செய்யும் புகைப்படத்தை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக சித்தரித்திரிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :