நான் எவ்வளவு வச்சு செஞ்சேன்... என்னவிட்டு விஜய்க்கு மட்டும் ஏன்? சிஎஸ் அமுதன் டிவிட்!

Last Updated: வெள்ளி, 9 நவம்பர் 2018 (13:35 IST)
சர்கார் பட விவகாரம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழ் படம் இயக்குனர் சி.எஸ் அமுதன் போட்டுள்ள டிவிட் தற்போது வைரலாகி வருகிறது. 
 
சர்கார் படத்தில், ஆளும் கட்சியை விமர்சிக்கும் வசனங்கள் இருப்பதகாவும், சில காட்சிகள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிப்பதகாவும் உள்ளதால், இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். 
 
இந்த போராட்டம் பூதாகாரம் ஆன நிலையில் படத்தில் இருந்து அந்த காட்சிகள் நீக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததை போல படம் மறுதணிக்கைக்கு சென்று காட்சிகள் நீக்கப்பட்டது. அதிமுகவின் போராட்டத்தை பலர் சர்காருக்கான ப்ரமோஷன் என்றே குறிப்பிடுகின்றனர். 
 
அந்த வகையில், என் படத்திற்கு ஏன் ப்ரமோஷன் கொடுக்கவில்லை என தமிழ் படம் 2 இயக்குனர் சிஎஸ் அமுதன் டிவிட்டரில் கேட்டுள்ளார். இந்த டிவிட்டிற்கு பலர் கேலியாக கமெண்ட் செய்தும் வருகின்றனர். 
 
தமிழ் படம் 2 படத்தில் ஓபிஎஸ் தியானம், பதவி பிரமானத்தின் போது அழுகை, சசிகலாவின் சபதம் ஆகியவற்றை கலாய்த்து சில காட்சிகளை படத்தில் வைத்திருந்தார். இதை மனதில் வைத்துதான் தற்போது எனக்கு மட்டும் ஏன் ப்ரமோஷன் கொடுக்கல என கேட்டுள்ளார். மேலும், சர்காருக்கு தனது ஆதரவைவும் வெளிப்படுத்தியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :