1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2023 (15:36 IST)

திரிஷாவுக்கு மிரட்டல் விடுத்த விஜய் குடும்பம்? லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு!

நடிகை திரிஷா விஜய் இருவரும் கோலிவுட்டின் நட்சத்திர காதல் ஜோடியாக  ஒரு காலத்தில் வலம் வந்தனர். பின்னர் விஜய்க்கு வீட்டில் பெண் பார்த்து திருமணம் செய்துவிட்டதால் அந்த ஜோடி பிரிந்துவிட்டது. 
 
விஜய்க்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் டீனேஜ் வயசில் இருந்தும் திரிஷாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, காதல் , திருமணம் என முயற்சிகள் எடுத்தும் அது கூடி வரவில்லை. இதனால் மீண்டும் நடிப்பில் முழு கவனம் செலுத்தி தொடர் ஹிட் கொடுத்து வந்தார். 
 
தற்போது பல வருடங்களுக்கு பின்னர் லியோ படத்தில் திரிஷாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். இதன் படப்பிடிப்பிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் விஜய்யுடன் நெருக்கமாக இருந்து வருகிறாராம் திரிஷா. இதை அறிந்த விஜய் குடும்பத்தினர் மறைமுகமாக திரிஷாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். 
 
இதனால் படத்தின் இயக்குனர் லோகேஷ், இப்போது சண்டை காட்சிகள் தான் படமாக்கப்பட்டு வருகிறோம். நீங்கள் சென்றுவிடுங்க என கூற அவர் சென்ற வேகத்திலே சென்னை திரும்பிவிட்டாராம்.