திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2023 (10:03 IST)

இப்போதும் சமந்தா முழுமையாக குணமாகவில்லை… மேடையில் நெகிழ்ந்த விஜய் தேவரகொண்டா!

லைகர் படத்துக்குப் பின்னர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படமாக குஷி உருவாகி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸானது. அந்த நிகழ்ச்சியின் போது பேசிய அவர் குஷி படமும் பேன் இந்தியா படம்தான் எனக் கூறியிருந்தார் விஜய் தேவரகொண்டா.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த குஷி படத்தின் மியூசிக்கல் கான்செர்ட் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா மற்றும் படத்தின் நாயகி சமந்தா ஆகியோர் கலந்துகொண்டு பாடல்களுக்கு நடனமாடினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டா சமந்தாவின் அர்ப்பணிப்பு பற்றி பேசினார்.

அதில் “சமந்தா இன்னும் முழுமையாக மையோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து குணமாகவில்லை. அவர் ஷூட்டிங்கில் சொல்லமுடியாத அளவுக்கு கஷ்டப்பட்டார். இப்போது அவர் மேல் லைட் பட்டால் எரிச்சல் ஏற்படும், கண்வலி வரும். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் உங்களுக்காக அவர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்” என பேசியுள்ளார்.