1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (15:36 IST)

சமந்தாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் தேவாரகொண்டா… வைரலாகும் புகைப்படம்!

சமந்தா தற்போது விஜய் தேவாரகொண்டாவுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

விஜய் தேவரகொண்டா நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது, ஷிவ் நிர்வானா என்பவர் இயக்கத்தில் மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஐந்து மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் கதை காஷ்மீரில் நடைபெறுவதாக உள்ளது என்பதால் காஷ்மீரில் தான் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில்  நடிகை சமந்தாவை படத்தின் காட்சியில் நடிப்பது போல ஏமாற்றி கேக் வெட்டவைத்து ஷூட் செய்வது போல பிறந்தநாளை சர்ப்ரைஸாகக் கொண்டாடியுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.