பிரபல நடிகையுடன் விஜய் தேவரகொண்டா திருமணம்?

VM| Last Modified ஞாயிறு, 24 மார்ச் 2019 (13:26 IST)
பிரபல தெலுங்கு நடிகை அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா திருமணம் செய்து கொள்ள உள்ளதாக வெளியான தகவலால் டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அர்ஜுன் ரெட்டி கீதா கோவிந்தம் படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கு நடிகர்களில் இளம் பேச்சுலரான இவருக்கு அதிக ரசிகைகள் ஆந்திராவில் உள்ளனர்.  இதனால் இவர் மீது காதல் சர்ச்சைகளும் திருமண சர்ச்சைகளும் அவ்வப்போது கோலிவுட் வட்டாரத்தில் எழுவது இயல்பு. 
deva
அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகையான நிகாரிகா கொணிடில்லாவை விஜய் தேவரகொண்டா திருமணம் செய்ய உள்ளதாக தகவல் பரவியது. நிகாரிகா தமிழில் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சூரியகாந்தம், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நிகாரிகா நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா நிகாரிகா திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில் இதுபற்றி மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பத்தினர் எந்த ஒரு அறிக்கையும் இதுவரை வெளியிடவில்லை.
 
நிகாரிகா சிரஞ்சீவியின் சகோதரர் கொண்டிலா நாகேந்திர பாபுவின் மகள் ஆவார். இவருடைய அண்ணன் தான் வருண் தேஜா. இவர் நம்மூர் சாய்பல்லவிக்கு ஜோடியாக பிதா படத்தில் நடித்தவர் 
 
இதனிடையே விஜய் தேவரகொண்டா-நிகாரிகா திருமணம் குறித்த தகவல் முற்றிலும் வதந்தி என்று கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :