வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 14 நவம்பர் 2023 (13:06 IST)

விஜய் தேவரகொண்டா வீட்டில் தீபாவளியைக் கொண்டாடினாரா ராஷ்மிகா?

தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலிப்பதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின.  ஆனால் இருவருமே அதை மறுத்து தாங்கள் நண்பர்கள்தான் என்றும் கூறி வந்தாலும், அதை ரசிகர்கள் நம்பவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் தேவரகொண்டா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. அதில் இரண்டு கைகள் ஒன்றின் மேல் ஒன்று இருக்க “நிறைய நடக்கின்றன. ஆனால் இது ஸ்பெஷலானது. சீக்கிரம் அறிவிக்கிறேன்” எனக் கூறியுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு விஜய்யும் , ராஷ்மிகாவும் வெளியிட்ட புகைப்படங்களை ஒப்பிட்டு ரசிகர்கள் இரண்டும் ஒரே வீட்டில் எடுக்கப்பட்டது போல உள்ளது எனக் கருத்துகளை பரப்பி வருகின்றனர். அதனால் இருவரும் இணைந்து ஒன்றாக ஒரே வீட்டில் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளதாக ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.