திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 6 செப்டம்பர் 2023 (13:37 IST)

உங்கள் படத்தால் 8 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தோம்.. விஜய் தேவரகொண்டாவுக்கு விநியோகஸ்தர் கோரிக்கை!

லைகர் படத்துக்குப் பின்னர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படமாக குஷி உருவாகி ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் இந்த படம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், தெலுங்கில் நல்ல வசூலைப் பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் வெற்றி காரணமாக தன்னுடைய சம்பளத்தில் இருந்து 100 ரசிகர்களின் குடும்பத்துக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாய் உதவியாக வழங்கப்படும் என விஜய் தேவரகொண்டா அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரின் வேல்ட் பேமஸ் லவ்வர் திரைப்படத்தை வாங்கி வெளியிட்ட அபிஷேக் பிச்சர்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ள ட்வீட்டில் ”உங்கள் வேல்டு பேமஸ் லவ்வர் படத்தை ரிலீஸ் செய்ததால் எங்களுக்கு 8 கோடி ரூபாய் நஷ்டம். இப்போது நீங்கள் ஒரு கோடி ரூபாய் உதவி செய்கிறீர்கள். அதே போல எங்களது விநியோகஸ்தர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் குடும்பத்துக்கும் உதவி செய்வீர்கள் என நம்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.