திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 நவம்பர் 2022 (15:23 IST)

'ஹெலிகாப்டரில் இருந்து மாஸாக இறங்கும் விஜய்'..வைரலாகும் போட்டோ

vijay
வாரிசு பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட விஜய்யின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது, வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடித்தவர்கள் டப்பிங் பேசி வரும் நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

சமீபத்தில், வாரிசு படத்தின் முதல் சிங்கில் எஸ்.தமன் இசையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதில், விஜய்- ராஷ்மிகாவின் நடனமும், விவேக் எழுதியபாடல் வரிகளும் ரசிகர்களை கவர்ந்தது.

விரைவில் இப்படத்தில் டீசர் மற்றும் டிரைலரை எதிர்பார்த்து ரசிகர்கள் கார்த்திருக்கும் நிலையில், இப்பட ஷூட்டிங் ஸ்பாட்டிங் விஜய்  கருப்பு கலர் காஸ்டியூமில்  நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edited by Sinoj