தெலுங்கில் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா லவ் டுடே?
லவ் டுடே திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
சமீபத்தில் வெளியான லவ்டுடே திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், 5 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் இதுவரை 20 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்ற லவ்டுடே படத்தை தெலுங்கிலும் டப் செய்து வெளியிட விஜய்யின் வாரிசு பட தயாரிப்பாளர் தில்ராஜு முயற்சி செய்து வருகிறார். இப்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கிட்டத்தட்ட 350 திரைகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.