செவ்வாய், 18 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 29 நவம்பர் 2022 (15:30 IST)

''ஜெயிலர் ''பட ஷூட்டிங்கில் சர்ப்பிரைஸ் கொடுத்த ரஜினிகாந்த்!

jailer
ஜெயிலர் பட ஷூட்டிங்கின்போது, சூப்பர் ஸ்டார் ரஜினி, ரோபோ சங்கரின் குடும்பத்திற்கு ஒரு சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.  இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்பட ஒருசிலர் நடித்து வரும் நிலையில் தற்போது சிவராஜ்குமார் இணைந்துள்ளதால் படம்  எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், இப்படத்தின் போஸ்டர் மற்றும் ஜிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வைரலானது. இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில்,  ரோபோ சங்கரின் 22 வது திருமண நாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினியை  குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்துப் பெற அவர் அனுமதி கேட்டிருந்தார்.

உடனே ரஜினிகாந்த், ரோபோ சங்கர்  குடும்பத்தினரை அழைத்து, அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியுள்ளார்.

இதுகுறித்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edited by Sinoj