வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (17:25 IST)

விஜய் 3 முறை மாறுவேஷத்தில் வந்து படம் பார்த்தார்: தியேட்டர் அதிபர் பேட்டி

vijay beast
விஜய் மூன்று முறை எங்கள் திரையரங்கிற்கு மாறுவேஷத்தில் வந்து படம் பார்த்துள்ளார் என சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கு உரிமையாளர் பேட்டி அளித்துள்ளார்
 
பெரிய நடிகர்கள் தங்களுடைய திரைப்படம் வெளியாகும்போது தியேட்டருக்கு வந்து ரசிகர்களோடு ரசிகராக படம் பார்க்க விரும்புவார்கள்
 
அந்தவகையில் விஜய்யும் படம் பார்க்க விரும்பினார். ஆனால் அதே நேரத்தில் ரசிகர்களிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக மாறுவேஷத்தில் அவர் வந்ததாகவும் கத்தி, துப்பாக்கி மற்றும் மெர்சல் ஆகிய மூன்று படங்களை எங்கள் திரையரங்கில் அவர் மாறுவேஷத்தில் பார்த்ததாகவும் அந்த திரையரங்கின் உரிமையாளர் தெரிவித்துள்ளார் 
 
அதேபோல் பீஸ்ட் படத்திற்கும் விஜய் மாறுவேடத்தில் வர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்