1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (13:58 IST)

மகேஷ்பாபு பிறந்த நாள்...#HBDSuperstarMahesh டுவிட்டரில் டிரெண்டிங்

makesh babu
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு   சமூக வலைதளங்களில்   #HBDSuperstarMahesh  ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி  வருகிறது.
 
தெலுங்கு சினிமாவில் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணாவின் மகன் மகேஷ்பாபு. இவர்  தனது தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
 
அதன்பின் தனது 25 ஆம்  வயதில்  சினிமாவில் ராஜகுமாருடு என்ற படத்தில் ஹீரோவாக  அறிமுகம் ஆனார். 
 
அதன்பின்னர், இவர் நடித்த முராரி, ஒக்கடு,, அத்தடு , போக்கிரி உள்ளிட்ட படங்களில் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரும் வசூல் சாதனை படைத்தது. ஒரு  சில படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டன. குறிப்பாக கில்லி, போக்கிரி ஆகிய படங்களும் இங்கும் வெற்றி பெற்றது.
 
இவர் நடிகை நம்ரதா ஹிரோத்கரை திருமணம் செய்துகொண்டார், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சர்க்காரு வாரு பட்டா என்ற படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது, ராஜமெளலி இயக்கத்தில் ஒரு பிரமாண்ட படத்தில் நடித்து வருகிறார். 
 
இன்று மகேஷ்பாபுவின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு சினிமாத்துறையினரும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். டிவிட்டரில் #HBDSuperstarMahesh  என்ற ஹேஸ்டேக்கும் டிரெண்ட் ஆகி வருகிறது.