செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2023 (07:58 IST)

இன்னும் ஓயாத அரபிக் குத்து அலை… யுட்யூபில் படைத்த சாதனை!

விஜய்யின் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல் இணையத்தில் தெறி ஹிட் அடித்தது.  விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஏபரல் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாட்டு ஒன்று பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி பேன் இந்தியா ஹிட் ஆனது. ரிலீஸுக்குப் பின் அந்த பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி அதுவும் ஹிட்டானது. படம் ரிலீஸாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும், இந்த பாடலின் தாக்கம் மட்டும் குறையவில்லை.

இந்நிலையில் வெளியாகி ஒன்றரை ஆண்டுக்ள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த பாடல் யுடியூபில் சுமார் 50 (500 மில்லியன்) கோடி பேருக்கும் மேலான எண்ணிக்கையில் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது.