வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2023 (07:52 IST)

அனிருத்தை என் மகள் மணக்கிறாரா?... கீர்த்தி சுரேஷ் தந்தை அளித்த விளக்கம்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் இவர் நடிகையர் திலகம் திரைப்படத்துக்காக தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவரைப் பற்றி காதல் கிசுகிசுக்கள் அதிகளவில் பரவி வருகின்றன. அதில் கவனத்தை ஈர்த்த ஒன்று இசையமைப்பாளர் அனிருத்தை அவர் காதலிப்பதாகவும், அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் பரவும் தகவல்.

இதை இருவருமே மறுத்து வந்தாலும், மீண்டும் மீண்டும் இந்த வதந்தி பரவி வருகிறது. இதுபற்றி இப்போது கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் விளக்கமளித்துள்ளார். அதில் “அனிருத்துக்கும் என் மகள் கீர்த்தி சுரேஷுக்கும் காதல் என்பது உண்மையில்லை. அவர்கள் இருவரையும் இணைத்து செய்திகள் வருவது இது முதல் முறையல்ல. இதில் சிறுதுகூட உண்மையில்லை” என விளக்கம் அளித்துள்ளார்.