செவ்வாய், 3 அக்டோபர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (15:58 IST)

’போஸ்டர் அடி.. அண்ணன் ரெடி!’ 4 நாளைக்கு நான் ஸ்டாப் கொண்டாட்டம்! – லியோ அசத்தல் அப்டேட்!

Leo
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் அப்டேட் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே நாளுக்கு நாள் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

அக்டோபர் 19ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் இதுவரை ஒரு சிங்கிள் மட்டுமே வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் மற்ற பாடல்கள் குறித்த அப்டேட் கேட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது லியோ குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகிறது. அடுத்த 4 நாட்களுக்கு வெவ்வேறு புதிய போஸ்டர்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 4 நாட்களும் நான் ஸ்டாப் கொண்டாட்டம்தான் என ஆவலோடு காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

Edit by Prasanth.K