1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: சனி, 2 ஜனவரி 2021 (12:50 IST)

விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ டீசர் ரிலீஸ் தகவல்!

விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ டீசர் ரிலீஸ் தகவல்!
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று ‘கோடியில் ஒருவன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் தற்போது புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன
 
அனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் இன்று மதியம் 2.01 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
விஜய் ஆண்டனி ஜோடியாக ஆத்மிகா நடிக்கும் இந்த படத்திற்கு உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார் என்பதும், விஜய் ஆண்டனியே படத்தொகுப்பு பணியையும் செய்கிறார் என்பதும் குரிப்பிடத்தக்கது.