செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 6 ஜனவரி 2021 (17:59 IST)

சிபிராஜின் கபடதாரி ரிலீஸ் தேதி அறிவிப்பு !!! ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் சத்யராஜின் மகன் சிபிசத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள கபடதாரி படம் வரும் தைப்பூசம் அன்று திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு தெரிவித்துள்ளது.

கன்னடத்தில் வெற்றிப் பெற்ற படம் கவலுதாரி. இப்படத்தை அனைத்து மொழிகளில் ரீமேக் உரிமத்துக்கான போட்டி ஏற்பட்டது. இது தமிழ் மொழியில் சிபி சத்யராஜ், நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடிக்க பிரமாண்டாக உருவாகிவந்தநிலையில் கொரொனா தொற்று காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் கபடதாரியின்  படப்பிடிப்பு முடிந்துள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்தார்.;

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: சுமார் 200 நாட்களுக்குப் பிறகு கபடதாரிப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.  இடையே ஏற்பட்ட தாமதத்தா 1  கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்

இந்நிலையில் நடிகர் சிபிராஜ் 2010 ஆண்டு வெளியான நாணயம், 2014 ஆம் ஆண்டு நாய்கள் ஜாக்கிரதை உள்ளிட்ட படங்களைத் தவிர வேறு ஹிட் கொடுக்கவில்லை.

இந்நிலையில் ஜான்சன் துரை,போக்கிரி ராஜா படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தியின் இயக்கத்தில் தற்போது கபடதாரி படத்தில் நடித்துள்ளார். எனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சிபிராஜின் பிறந்தநாளன்று சூர்யா வெளியிட்ட நிலையில் இப்படம் தைப்பூசம் தினத்தன்று திரையரங்கில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு தமிழகத்தில்தியேட்டர்கள்  100% பார்வையாளர்களுக்கு அனுமதியளித்துள நிலையில் ஜனவரி 13 ஆம் தேதி விஜய்யின் மாஸ்டர் சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய படங்கள் வெளியாகிறது. இதையடுத்து கபடதாரி ரிலீஸாகும் என்பது குறிப்பிடத்தக்கது.