1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 16 மே 2022 (10:56 IST)

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘வள்ளிமயில்’… இன்று முதல் ஷுட்டிங்!

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து வள்ளிமயில் என்ற திரைப்படம் உருவாக உள்ளது.

டிஷ்யூம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, அடுத்தடுத்து வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். ஒரு கட்டத்தில் நான் படத்தின் மூலம் கதாநாயகனாக மாறிய அவர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். முதலில் அவர் நடிக்கும் படங்களுக்கு மட்டும் இசையமைத்து வந்த அவர், இப்போது தன் படங்களுக்கும் மற்ற இசையமைப்பாளர்களை இசையமைக்க வைத்து வருகிறார்.

இதையடுத்து இப்பொது ரத்தம் மற்றும் மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் அவர், அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் வள்ளிமயில் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் பாரதிராஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். 1980 கால கட்டங்களில் நடக்கும் கதையாக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப் பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இதையடுத்து அறிவித்தபடி இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் தொடங்கியுள்ளது.  இது சம்மந்தமாக படக்குழு சார்பாக வெளியான தகவலில் “நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா இணைந்து நடிக்கும் ‘வள்ளி மயில்’ படபிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது. படபிடிப்பை கிளாப் அடித்து துவக்கி வைத்தார் தமிழ் நாடு உணவு துறை அமைச்சர் திரு.சக்கரபாணி அவர்கள். திண்டுக்கல்லிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூத்தம்பூண்டி ஊரிலுள்ள சிவன் கோவிலில் ஆரம்பமான இதன் படபிடிப்பு திண்டுக்கல் சுற்றி தொடர்ந்து 30 நாள்கள் நடைபெறுகிறது.” எனக் கூறப்பட்டுள்ளது.