வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 2 மே 2022 (16:38 IST)

சிறுத்தை சிவா சொன்ன கதை… சூர்யாவின் ரியாக்‌ஷன்?... உடைகிறதா கூட்டணி?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ஒரு படம் நடிப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பே ஒப்பந்தம் போடப்பட்டது.

சிறுத்தை ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றவுடன் சூர்யாவோடு ஒரு படத்தில் இணைய ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் சிறுத்தை சிவாவுக்கு அப்போது அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த படம் தள்ளிப்போனது. அதன் பின்னர் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் இணைய வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது அண்ணாத்த படத்தை முடிந்துள்ள நிலையில் சிறுத்தை சிவா சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

இந்த படம் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னமும் தொடங்கப்படவில்லை. இதனால் சூர்யா இப்போது பாலாவின் புதிய படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அடுத்து வாடிவாசல் படமும் தொடங்க உள்ள நிலையில் சிறுத்தை சிவா படம் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்காக சிவா சொன்ன கதை சூர்யாவுக்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் மீண்டும் மீண்டும் குறைகளை சொல்லி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் சிறுத்தை சிவா மீண்டும் அஜித்தை வைத்து கூடிய விரைவில் ஒரு படத்தை இயக்க வாய்ப்புகள் உள்ளதென்றும் சொல்லப்படுகிறது.