திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (12:59 IST)

'அது நான் இல்லை’.. இது சலீம் 2 இல்லை.. விஜய் ஆண்டனி அறிவிப்பு..!

சமீபத்தில் வெளியான மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் எனக்கே தெரியாமல் ஒரு நிமிட காட்சியை இந்த படத்தில் யாரோ இணைத்து விட்டார்கள் என்று இயக்குனர் விஜய் மில்டன் குற்றம் சாட்டிய நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி ’அது நான் இல்லை இது சலீம் 2 இல்லை’ என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான மழை பிடிக்காத மனிதன் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் கலையான விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் திடீரென இந்த படத்தின் ஒரு நிமிட காட்சியை எனக்கே தெரியாமல் யாரோ இணைத்து விட்டார்கள் என்றும் இந்த படத்தில் நான் கட்டிக் காத்து வைத்திருந்த சஸ்பென்சை முதலிலேயே உடைத்து விட்டார்கள் என்றும் இயக்குனர் விஜய் மில்டன் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி தான் அந்த ஒரு நிமிட காட்சியை இணைத்திருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிட காட்சியை தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இணைத்துள்ளதாக என் நண்பர் படத்தின் இயக்குனர் திரு விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்து  இருந்தார். அது நான் இல்லை, இது சலீம் 2 இல்லை’ என்று விஜய் ஆண்டனி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Edited by Siva