செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (08:28 IST)

கடந்த வாரம் ரிலீஸ் ஆன டியர் & ரோமியோ படங்களுக்கு இந்த நிலைமையா?

கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் தமிழ் படங்களுக்கான வரவேற்பு மிகக் குறைவாக உள்ளது. அதற்கேற்றார்போல ரசிகர்களை கவரும் படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் முன்னணி நடிகர்களான விஜய் ஆண்டனி மற்றும் ஜி வி பிரகாஷ் நடித்த ரோமியோ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின.

ஆனால் இந்த படங்களும் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. பல இடங்களில் இந்த படங்களுக்கு டிக்கெட்கள் விற்பனை ஆகாததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது சோகமான செய்தியாக அமைந்துள்ளது. அடுத்த சில வாரங்களில் விஷாலின் ரத்னம் படம் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களில் மஞ்சும்மள் பாய்ஸ் மற்றும் பிரேமலு போன்ற அழகான கதைகள் கொண்ட மலையாள படங்கள் தமிழ்நாட்டில் சக்கைபோடு போட்டன. அதே போல கடந்த வாரம் ரிலீஸான ‘ஆவேஷம்’ மற்றும் வர்ஷங்களுக்கு ஷேஷம் ஆகிய படங்களுக்குக் கூட ஓரளவு நல்ல வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.