ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2024 (07:22 IST)

லேடி தேவதாஸாக நித்யா மேனன் நடிக்கும் ‘டியர் எக்ஸஸ்’… கவனம் ஈர்த்த போஸ்டர்!

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை நித்யா மேனன், தமிழ் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழி பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் நடிக்கும் புதிய படமான டியர் எக்ஸஸ் என்ற படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது.

வினய் ராய், நவ்தீப் (அறிந்தும் அறியாமலும்), பிரதீக் பாப்பர் (FOUR MORE SHOTS PLEASE), தீபக் பரம்போல் ( மஞ்சும்மல் பாய்ஸ்), என பெரிய நட்சத்திரம் பட்டாளமே நடிக்க உள்ளனர். இயக்குநர் விஷ்ணு வர்தனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காமினி இந்த படத்தை எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு பணிகளை ப்ரீத்தா ஜெயராமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை சண்முகராஜா கவனிக்க உள்ளார்.

பேண்டசி காமெடி ஜானரில் உருவாகும் இந்த படத்தில் நித்யா மேனன் பலமுறை காதலில் தோல்வியடைந்த ஒரு பெண்ணாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.  போஸ்டரில் நித்யா மேனன் ஜாலியாக கூலிங் கிளாஸ் அணிந்து தன்னுடைய எக்ஸுக்கு கால் செய்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.