ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 30 மார்ச் 2024 (14:12 IST)

தனுஷோடு உட்கார்ந்தால் ஐந்து நிமிடத்தில் பாடல் முடிந்துவிடும்- ஜி வி பிரகாஷ்!

தனுஷ் தனது 50 ஆவது படமான ராயன் –ஐ இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில்  தனுஷ் அடுத்து  ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார். டீனேஜ் இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலைப் பற்றிய படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. அதில் ஜி வி பிரகாஷ் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்துள்ளனராம். இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக அவர்கள் இந்த பாடலில் நடித்துள்ளதாக, அந்த பாடலை படத்தின் ப்ரமோஷனுக்காக பயன்படுத்திக் கொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் பாடல்கள் பற்றி பேசியுள்ள ஜி வி பிரகாஷ் “இயக்குனர் தனுஷுடன் கம்போசிங்குக்கு உட்கார்ந்தால் ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் மெட்டு உருவாகிவிடும். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. அதில் எந்த பாடலை முதலில் ரிலீஸ் செய்வது என்று ஆலோசித்து வருகிறோம். ஒரு பாடலில் நான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.