வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2024 (07:45 IST)

மீண்டும் ஒரு குறட்டை காமெடி படமா? ஜி வி பிரகாஷின் ‘டியர்’ டிரைலர் எப்படி?

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்த ஜி வி பிரகாஷ் குமார் திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் நடிகரானார். ஆரம்பத்தில் 18+ பிளஸ் படங்களில் நடித்து வந்த அவர் பின்னர் நல்ல கதையம்சம் உள்ள படங்களிலும் நடித்தார்.

ஆனால் அவரின் படங்கள் பெரிதாக வெற்றி பெறாத காரணத்தால், இப்போது நடிப்பு மற்றும் இசை என இரட்டைக் குதிரையில் சவாரி செய்கிறார். கடந்த இரண்டு வாரங்களில் அவரின் ரெபல் மற்றும் கள்வன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸான நிலையில் ஏப்ரல் 11 ஆம் தேதி அவர் நடித்துள்ள ‘டியர்’ என்ற படம் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தை ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்க, நட்மெக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி இணைந்து தயாரித்துள்ளனர். முக்கியக் கதாபாத்திரங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு, காளி வெங்கட், ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற குட்னைட் படத்தில் கதாநாயகனுக்கு குறட்டை பிரச்சனை இருந்ததை போல இந்த படத்தில் நாயகிக்கு குறட்டை பிரச்சனை இருக்க அதனால் பாதிக்கப்படும் கதாநாயகனின் அவஸ்தையைப் பற்றிய படமாக உருவாகியுள்ளதாக டிரைலரில் தெரிகிறது.