விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தின் வெளிநாட்டு உரிமத்தைக் கைப்பற்றிய நிறுவனம்!
இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ள கொலை திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் பாலாஜி இதற்கு முன் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான விடியும் முன் என்ற திரைப்படத்தை இயக்கியவர். பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்தாலும் சில பல காரணங்களால் ரிலீஸ் தாமதமாகி வந்தது.
இந்நிலையில் இப்போது ஜூலை 21 ஆம் தேதி ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. நேற்று இந்த படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்தன. இந்நிலையில் படத்தின் வெளிநாட்டு உரிமம் பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.
இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையை டெண்ட்கொட்டா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.