வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 7 ஜூலை 2023 (12:41 IST)

தெலுங்கில் வெளியாகும் மாமன்னன்… டிரைலரை வெளியிடும் மகேஷ் பாபு!

மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.  மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கியுள்ளார். இந்த படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. ரிலீஸானதில் இருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்று இதுவரை 35 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது மாமன்னன் திரைப்படம் நாயகடு என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஜூலை 14 ஆம் தேதி முதல் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு நாயகடு படத்தின் டிரைலரை தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு டிவிட்டரில் வெளியிடுகிறார்.

மாரி செல்வராஜின் முந்தைய படங்களான பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய படங்கிலும் தெலுங்கில் டப் செய்யபட்டு வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.