1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 4 மே 2023 (09:37 IST)

விபத்துக்குப் பின் முதல் முறையாக பொதுவெளியில் விஜய் ஆண்டனி!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வளர்ந்து வந்த காலத்தில் திடீரென நடிகர் அவதாரம் எடுத்தார் விஜய் ஆண்டனி. அவர் நடித்த நான், சலீம் ஆகிய படங்கள் சிறப்பாக ஓடியதால் வரிசையாக படங்களில் நடித்தார். 2016 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் அவரை கமர்ச்சியல் கதாநாயகனாக மாற்றியது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் அந்த படம் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பிச்சைக்காரன் 2 படத்தின் ஷூட்டிங்கின் போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

இதில் விஜய் ஆண்டனிக்கு முகத்தில் தீவிரமான காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர் கடலில் விழுந்ததால் கடல் தண்ணீரை குடித்ததால் மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் அவரின் முக அமைப்பு மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது அவர் பிச்சைக்காரன் 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.